• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம் செய்​யும் 32 நிறு​வனங்​கள், தனி​நபர்​களுக்கு தடை விதிக்​கப்​படு​கிறது.

சீனா​வில் இருந்து ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழி​யாக ஈரானுக்கு சோடி​யம் குளோரேட், சோடி​யம் பெர்​குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்​கள் சரக்கு கப்​பல்​கள் மூலம் அனுப்​பப்​பட்டு வரு​கிறது. இந்​தி​யா​வின் சண்​டிகரை சேர்ந்த பார்ம்​லேன் நிறு​வனம் சார்​பில் ஈரானின் ஏவு​கணை திட்​டங்​களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள் கொள்​முதல் (யுஏஇ வழியாக)செய்​யப்​படு​கிறது.

மேலும் துருக்​கி, ஹாங்​காங், ஜெர்​மனி, உக்​ரைன் நாடு​களை சேர்ந்த சில நிறு​வனங்​களும் ஈரானின் ஏவு​கணை, ட்ரோன் தயாரிப்​புக்கு தேவை​யான பொருட்​களை விநி​யோகம் செய்து வரு​கின்​றன. அந்த நிறு​வனங்​களுக்கு தடை விதிக்​கப்​படு​கிறது. தடை விதிக்​கப்​பட்ட நிறு​வனங்​கள் மற்​றும் கருப்பு பட்​டியலில் சேர்க்​கப்​பட்ட தொழில​திபர்​களு​டன் உலக நாடு​கள் வணி​கத்​தில் ஈடு​படக்​கூ​டாது. இதை மீறும் நிறு​வனங்​கள், தனி​நபர்​கள் மீது பொருளா​தார தடை விதிக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

தடை விதிக்​கப்​பட்​டது ஏன்? – அணு குண்டு தயாரிக்க ஈரான் முயற்சி செய்​வ​தாக அமெரிக்​கா, இஸ்​ரேல், ஐரோப்​பிய நாடு​கள் தொடர்ந்து குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​வைத்து இஸ்​ரேல் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக கடந்த ஜூன் 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்​கள் ஈரானின் போர்​டோ, நடான்​ஸ், இஸ்​ப​கான் ஆகிய முக்​கிய அணு சக்தி தளங்​கள் மீது சக்​தி​வாய்ந்த குண்​டு​களை வீசின.

இதனால் ஈரானின் ஏவு​கணை​கள் கையிருப்பு கணிச​மாக குறைந்​திருக்​கிறது. இந்த சூழலில் ஏவு​கணை உற்​பத்தி மற்​றும் ராணுவ ட்ரோன் உற்​பத்​தி​யில் ஈரான் தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது. இதற்கு தேவை​யான மூலப்​ பொருட்களை உலகம் முழு​வதும் இருந்து இறக்​குமதி செய்து வரு​கிறது. இதை தடுக்​கவே 32 நிறு​வனங்​களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருக்கிறது.



Read More

Previous Post

சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை | Chhattisgarh Leads on Copper Exports to China

Next Post

லங்காவி படகு விபத்து: மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன, இறப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு | Makkal Osai

Next Post
லங்காவி படகு விபத்து: மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன, இறப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு | Makkal Osai

லங்காவி படகு விபத்து: மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன, இறப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin