• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தூதரகம் தீவிர முயற்சி | Embassy makes intensive efforts to locate 3 Indians missing in Iran

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தூதரகம் தீவிர முயற்சி | Embassy makes intensive efforts to locate 3 Indians missing in Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரான் சென்றனர். ஆனால் டெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு அவர்களை காணவில்லை.

பஞ்சாபின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் இவர்களை துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் டெஹ்ரான் சென்ற பிறகு மூவரும் ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர்.

ரூ.1 கோடி பணம் தராவிடில் மூவரையும் கொன்றுவிடுவோம் என இக்கும்பல் தொலைபேசியில் மிரட்டியதாக இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஈரானில் மூவரும் கடத்தப்பட்டதை இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கொண்டு சென்றுள்ளது. மூவரையும் உடனடியாக கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்களை குடும்பத்தினருடன் தூதரகம் அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

கிராம வீட்டுமனை திட்டங்களுக்கு செலவு குறைந்த கட்டிட தொழில்நுட்பம் @ ஆரோவில் | Cost Effective Building Technology for Rural Housing Projects @ Auroville

Next Post

அமைச்சரவை மீண்டும் பதவியேற்பது குறித்த ஊகங்களைக் கேஜே நிராகரித்தார் – Malaysiakini

Next Post
அமைச்சரவை மீண்டும் பதவியேற்பது குறித்த ஊகங்களைக் கேஜே நிராகரித்தார் – Malaysiakini

அமைச்சரவை மீண்டும் பதவியேற்பது குறித்த ஊகங்களைக் கேஜே நிராகரித்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin