Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்த மீறல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி, ஈரான் அணுசக்தி பலத்தை மீண்டும் கட்டியெழுப்பாது என நம்பிக்கை தெரிவித்தார்.
“ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை” என அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்ததை மீறிவிட்டதாக ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி குற்றஞ்சாட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த டிரம்ப், “இரு நாடுகளின் செயலும் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை” என்றார்.
குறிப்பாக போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட சில மணி நேரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றார். தங்கள் படையை இஸ்ரேல் திருப்பி அழைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை தான் பார்க்க விரும்பவில்லை என்றும் அந்நாட்டுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அடுத்த சில மணிநேரத்திலேயே போர் நிறுத்தம் தொடர்ந்து அமலில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பே பதிவிட்டார். இனி இஸ்ரேல் ஈரானை தாக்காது என்றும் அதே போல் ஈரான் ஒரு போதும் தனது அணுசக்தி பலத்தை மீண்டும் கட்டியெழுப்பாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்புகொண்டு தொலைபேசியில் பேசிய பிறகு, தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக கொண்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 24, 2025 9:19 PM IST


