• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்…!

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்படவுள்ள எந்தவொரு ஒப்பந்தமும் ஈரானின் அணுசக்தி உட்கட்டமைப்புகளை முழுமையாக அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.


ஜெருசலேமில் நடைபெற்ற அமெரிக்க யூத அமைப்புகளின் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் தெரிவித்த அவர், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்தபோது இந்த நிபந்தனைகளைத் தெளிவாக முன்வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்திப் பொருட்கள் 



ஈரானிடமுள்ள செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்கள் அனைத்தும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும், அணுசக்தி செறிவூட்டல் திறனை முற்றாக முடக்க வேண்டும் மற்றும் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளாகும்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்...! | Netanyahu Demands Iran Nuclear Deal Conditions

இந்தநிலையில், ஈரானின் வாக்குறுதிகளை மட்டும் நம்பாமல், எவ்வித முன்னறிவிப்புமின்றி எந்நேரமும் மேற்கொள்ளக்கூடிய சர்வதேச ஆய்வுகள் (Effective Inspections) அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த ஜூன் மாதம் (2025) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய 12 நாள் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் பேச்சுவார்த்தைகள் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.

எண்ணெய் ஏற்றுமதி

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள சீனாவிற்கு விற்கப்படும் எண்ணெயைத் தடுப்பதன் மூலம், ஈரான் மீதான பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க ட்ரம்பும் நெதன்யாகுவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்...! | Netanyahu Demands Iran Nuclear Deal Conditions



ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உடன்பட்டாலும், பேச்சுவார்த்தை மூலம் இதனைச் சாதிக்க முடியும் என ட்ரம்ப் நம்புகிறார்.


இருப்பினும், ஈரான் எப்போதும் ஏமாற்றும் தன்மையுடையது என்பதால் ஒப்பந்தங்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என நெதன்யாகு தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

காசநோய் எச்சரிக்கை: பண்டிகைக் கொண்டாட்டங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்! | Makkal Osai

Next Post

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது | Makkal Osai

Next Post
சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது | Makkal Osai

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு; 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin