• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்…

இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

86 வயதான கமேனி, கடந்த சனிக்கிழமை தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் கொல்லப்பட்டார்.

நேற்றுப் புதன்கிழமை இரவு, தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா (Grand Mosalla) தொழுகை வளாகத்தில் தொடங்கவிருந்த இந்த மூன்று நாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஏராளமான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைத் தயார் செய்யவும், அதிகப்படியான மக்களைக் கையாளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் கால அவகாசம் தேவைப்படுவதால், இந்த சடங்குகள் “மிகவும் பொருத்தமான நேரத்திற்கு” ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய பிரச்சார ஒருங்கிணைப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், கமேனியின் இடத்திற்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அந்நாட்டின் நிபுணர் குழு (Assembly of Experts) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கமேனியின் மற்றொரு மகனான 56 வயது மதகுரு மொஜ்தபா கமேனி, அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஈரான் மீதான இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,045 இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது. 

மனித உரிமைகள் அமைப்புகளின் தகவல்படி, பலியானவர்களில் 181 குழந்தைகளும் அடங்குவர். இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை நோக்கித் தாக்குதல் நடத்தி வருகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || ஈரானிய போர்க்கப்பலை இலங்கையில் நாமே தாக்கினோம்: அமெரிக்கா

Next Post

ஈரான் போர்: ட்ரம்புக்கு செனட் ஆதரவு, தீர்மானம் தோல்வி|53-47 Vote: Senate Backs Trump on Iran War

Next Post
ஈரான் போர்: ட்ரம்புக்கு செனட் ஆதரவு, தீர்மானம் தோல்வி|53-47 Vote: Senate Backs Trump on Iran War

ஈரான் போர்: ட்ரம்புக்கு செனட் ஆதரவு, தீர்மானம் தோல்வி|53-47 Vote: Senate Backs Trump on Iran War

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin