அமெரிக்காவுடன் ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும், அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
சரணடைதலுக்கான நிபந்தனைகள்
ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது என சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானிப்பார் என குறிப்பிட்டார்.
மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது, அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

