• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈராக்கில் தொடரும் அவலம்.. – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
August 10, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈராக்கில் தொடரும் அவலம்.. – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈராக்கில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல் வலுத்து வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். போர் சூழல், தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் கட்டாய ஹிஜாப் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

விளம்பரம்

நடிகையாகவே இன்ஸ்டாகிராம் பிரபலமாகவோ இருந்தால் படுகொலை, பெண்ணுரிமை பேசினால் சிறையில் அடைப்பு என பெண்களுக்கு எதிரான கொடுமைகளாலும் தலைப்பு செய்திகளில் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், இவற்றையெல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு ஈராக் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தம் பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. கடுமையான போராட்டத்துக்கு பிறகு 1959 ஆம் ஆண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை 9 ஆகக் குறைக்க ஈராக் சட்டத்துறை அமைச்சகம் மசோதா ஒன்றை தற்போது முன்மொழிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆண்களுக்கான திருமண வயதை 15 ஆக குறைக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.

விளம்பரம்

இது குழந்தைத் திருமணம் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும் என்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக நடந்த பல தலைமுறை போராட்டத்தை இந்த சட்டம் சீர்குலைக்கும் என்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளன.

இதையும் படிக்க:
முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

இளம் பெண்களின் கல்வி, உடல்நிலை மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பதின்ம வயது கர்ப்பம், குடும்ப வன்முறை, கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது ஈராக்கை பல தசாப்தங்கள் பின்னோக்கி நகர்த்தும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்ப விவகாரங்களில் நீதித்துறையே இதுவரை முடிவு எடுத்து வந்த நிலையில், இனி மத போதகர்களும் கூட முடிவெடுக்கலாம் என சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மத போதகர்களுக்கு இதுபோல அதிகாரத்தைக் கொடுப்பது வாரிசு உரிமை, விவாகரத்து, குழந்தைப் பாதுகாப்பு விஷயங்களில் பெண்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஹோட்டல்ல சாப்பாடு சரியில்லையா.? இப்படி தான் புகார் அளிக்கனும்.!


ஹோட்டல்ல சாப்பாடு சரியில்லையா.? இப்படி தான் புகார் அளிக்கனும்.!

கடந்த ஜூலை மாதமே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட மசோதா திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அதே மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது. இந்த முறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஷியாக்கள் உள்ளதால், சட்டமாக நிறைவேறும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

UPI பயனாளர்களுக்கு மகிழச்சியான செய்தி.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு

Next Post

Today Gold Rate | தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா?

Next Post
Today Gold Rate | தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate | தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin