• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இ-மெயிலில் 1,000க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள்… அதிகாரிகளை அலறவிட்ட பெங்களூரு நபர் கைது… பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இ-மெயிலில் 1,000க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள்… அதிகாரிகளை அலறவிட்ட பெங்களூரு நபர் கைது… பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 30, 2026 6:04 PM IST

டெல்லி உயர்நீதிமன்றம், சட்டப்பேரவை, பல முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சமீப காலமாக தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

ஸ்ரீனிவாஸ் லூயிஸ்
ஸ்ரீனிவாஸ் லூயிஸ்

நாடு முழுவதும் 1,000க்கும் அதிகமான போலி வெடிகுண்டு மிரட்டல்களை மெயில் அனுப்பி, அதிகாரிகளை அலறவிட்ட பெங்களூரு நபரை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே, டெல்லி உயர்நீதிமன்றம் வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியவர் மீது பாய்ந்த நடவடிக்கையின் பின்னணி என்ன?

டெல்லி உயர்நீதிமன்றம், சட்டப்பேரவை, பல முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சமீப காலமாக தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. பதறி அடித்துக் கொண்டு தேடுதலில் ஈடுபடும் பாம் ஸ்குவாட் டீமிற்கு, கடைசியாக இது புரளி என தெரியவரும். இப்படி இமெயில் மூலம் வரும் அடுத்தடுத்த வெடிகுண்டு மிரட்டல்களால் பெரிதும் அவதிக்குள்ளான அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்த மர்ம நபரைப் பிடிக்க தேடுதலில் இறங்கினர்.

சம்பந்தப்பட்ட இமெயில் ஐடியை ட்ராக் செய்து தேடியதில் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்துவந்த 47 வயதான ஸ்ரீனிவாஸ் லூயிஸ் என்பவர் டெல்லி போலீசாரிடம் சிக்கினார். உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ஸ்ரீனிவாஸின் வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்த டெல்லி போலீசார், பலத்த பாதுகாப்புடன் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அவரிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்பையும் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

Delhi Police arrests Mysuru man Srinivas Louis, for sending over 1,100 hoax bomb threats to schools, govt offices.

Louis was apprehended from his rented accommodation in Mysuru during a joint operation by Delhi Police and local police teams. pic.twitter.com/RH4vKcAXzy


— FOX-BET (@PratyaksaA) March 30, 2026

முதுகலைப் பட்டதாரியான ஸ்ரீனிவாஸ், பெங்களூருவைச் சேர்ந்தவர். வேலையின்றி சுற்றித்திரிந்தவர், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். பலமுறை முயன்றும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்தவர், அரசு ஊழியர்களை திட்டமிட்டுப் பழிவாங்கவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து அச்சுறுத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. மெயில் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் வழியாக நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளார். இவரால் அரசுக்கு ஏராளமான நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இ-மெயிலில் 1,000க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள்… அதிகாரிகளை அலறவிட்ட பெங்களூரு நபர் கைது… பின்னணி என்ன…?

Read More

Previous Post

Tamilmirror Online || ’தங்க’ ஆட்டோ சாரதிக்கு பாராட்டு மாரி

Next Post

மின்சார கட்டணம் உயர்வு:  ஏப்ரல் 1 முதல்  புதிய கட்டணங்கள் நடைமுறை – Sri Lanka Tamil News

Next Post
மின்சார கட்டணம் உயர்வு:  ஏப்ரல் 1 முதல்  புதிய கட்டணங்கள் நடைமுறை – Sri Lanka Tamil News

மின்சார கட்டணம் உயர்வு:  ஏப்ரல் 1 முதல்  புதிய கட்டணங்கள் நடைமுறை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin