பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
ஆக்கிரமிப்புப் போர்
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஈரானின் கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் பாகிஸ்தான் தரப்பிற்கு மட்டுமே தெரிவிக்கப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுக்குழுவும் பாகிஸ்தானில் தங்கியுள்ள சூழலில் இந்த நேரடிச் சந்திப்பு குறித்த மறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி இஸ்லாமாபாத் வந்தடைந்ததை உறுதிப்படுத்திய பாகேய், அவர் பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் நிலைநாட்டவும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் தற்போதைய மத்தியஸ்த முயற்சிகளுக்கு இணங்க இந்தச் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

