• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு வெள்ளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகள் மூலம் தடுப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் புதன்கிழமை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்(இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத்தை மத்திய பெட்ரோலியல், இயற்கை எரிவாயு, சுற்றுலாத் துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி சந்தித்தார். அப்போது, மோசமான வானிலையின் போது கேரளத்தில் உள்ள முல்லைப்பெரியாறு, இடுக்கி போன்ற அணைகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

வெள்ளத்தை தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உயர் துல்லிய நிலப்பரப்புத் தரவுகள் உள்ளிட்ட உள்ளீடுகளை அளிக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த தரவுகளை வழங்குவதாகவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் உறுதிஅளித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மறு வாழ்வளிப்பது குறித்து திட்டமிடுவதற்கு விண்வெளி தகவல்தொடர்பு திறனுடன் கூடிய மாதிரியை உருவாக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணின் பரப்பு, அவற்றை உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் விஞ்ஞானிகளை சுரேஷ்கோபி கேட்டுக் கொண்டதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

’இழுவை மடிவலை பயன்பாடு அதிகரிப்பு’

Next Post

SA vs USA, Super 8: ஒரே ஓவரில் 3 சிக்ஸருடன் விரட்டி வந்த யுஎஸ்ஏ! ரபாடா வீசிய மாயஜால ஓவர் – எஸ்கேப் ஆன தென் ஆப்பரிக்கா-south africa beat usa by 18 runs and wins in first super 8 match

Next Post
SA vs USA, Super 8: ஒரே ஓவரில் 3 சிக்ஸருடன் விரட்டி வந்த யுஎஸ்ஏ! ரபாடா வீசிய மாயஜால ஓவர் – எஸ்கேப் ஆன தென் ஆப்பரிக்கா-south africa beat usa by 18 runs and wins in first super 8 match

SA vs USA, Super 8: ஒரே ஓவரில் 3 சிக்ஸருடன் விரட்டி வந்த யுஎஸ்ஏ! ரபாடா வீசிய மாயஜால ஓவர் - எஸ்கேப் ஆன தென் ஆப்பரிக்கா-south africa beat usa by 18 runs and wins in first super 8 match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin