ஆனால், இரானின் வான்வழித் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருக்கிறது. அதே நேரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இரானைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ரைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் போர் விமானங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்னொரு பக்கம் இரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் போராக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. இதில், இரானின் பாதுகாப்புப் படையைத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.

