• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது? | Iran fires missiles with cluster bombs on Israel

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது? | Iran fires missiles with cluster bombs on Israel
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்: இஸ்​ரேல் – ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு நகரங்​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சேதமடைந்​தன.

அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்​படுத்​து​வ​தாக கூறி, அந்​நாட்​டின் மீது இஸ்​ரேல் தாக்​குதலை தொடங்​கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையி​லான போர் நேற்று 8-வது நாளாக நீடித்​தது. இந்த தாக்​குதல்​களால் இருதரப்​பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்​பட்​டுள்​ளது. ஈரானில் ராணுவ உயர் அதி​காரி​கள், மூத்த அணு விஞ்​ஞானிகள் உட்பட 224 பேர் உயி​ரிழந்​தனர். இஸ்​ரேலில் 25 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், இஸ்​ரேலின் மத்​திய பகு​தி​களில் மக்​கள் அதி​கம் வசிக்​கும் இடங்​களை குறி​வைத்து ஈரான் கடந்த 19-ம் தேதி கொத்து (கிளஸ்​டர்) குண்​டு​களை வீசி​ய​தாக, அமெரிக்​கா​வில் உள்ள இஸ்​ரேல் தூதரகம் தெரி​வித்​தது. சுமார் 8 கி.மீ. சுற்​றளவு வரை கடும் சேதத்தை ஏற்​படுத்​தக்​கூடிய கொத்து குண்​டு​களை இஸ்​ரேல் மீது ஈரான் பயன்​படுத்​து​வது இதுவே முதல் முறை. ஈரான் வீசிய கொத்து குண்​டு​களால், இஸ்​ரேல் தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு பகு​தி​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சரிந்து கிடப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இஸ்​ரேலின் துறை​முக நகர​மான ஹைபா மற்​றும் டான் மாவட்​டங்​கள் உட்பட பல பகு​தி​கள் மீது ஈரான் நேற்று சரமாரி​யாக ஏவு​கணை​களை வீசி​யது.

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் சேதம்: சைரன் ஒலி எழுப்​பியதும் மக்​கள் பதுங்கு குழிகளி​லும், வணிக வளாகங்​களின் கார் பார்க்​கிங் பகு​தி​களி​லும் சென்று பதுங்​கினர். ஈரான் வீசிய ஏவு​கணை​கள் பலகட்​டிடங்​கள் மீது விழுந்து வெடித்​தன. பீர் சேவா நகரில் உள்ள மைக்​ரோ​சாஃப்ட் அலு​வலக கட்​டிடம் மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்​த​தில், பலர் காயம் அடைந்​தனர். இரு நாடு​கள் இடையே பதற்​றத்தை தணிக்​கும் வித​மாக, ஜெனி​வா​வில் நடை​பெறும் பேச்​சு​வார்த்​தைக்கு வரு​மாறு ஈரான் வெளி​யுறவு துறை அமைச்​சர் அப்​பாஸ் அராகசிக்கு ஐரோப்​பிய நாடு​களின் அதி​காரி​கள் அழைப்பு விடுத்​துள்​ளனர். இரு நாடு​களும் கட்​டுப்​பாட்​டுடன் நடந்து கொள்​ளு​மாறு பிரான்​ஸ், ஜெர்​மனி, இங்​கிலாந்து ஆகிய நாடு​களின் அமைச்​சர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

போர் நீடித்து வரும் நிலை​யில், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் அவசர கூட்​டத்தை கூட்​டு​மாறு ஈரான் மற்​றும் அதற்கு ஆதரவு தெரிவிக்​கும் ரஷ்​யா, சீனா மற்​றும் பாகிஸ்​தான் ஆகிய நாடு​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளன. இதனால், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் 2-வது அவசர கூட்​டம் விரை​வில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தாக்குதலை தள்ளிவைத்த ட்ரம்ப்: இதற்​கிடையே, அமெரிக்​கா, பிரிட்​டன்,பிரான்​ஸ், ஜெர்​மனி, கனடா, ஆஸ்​திரேலியா உள்​ளிட்ட நாடு​கள் இஸ்​ரேலுக்கு ஆதர​வாக உள்​ளன. ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்​பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோ​சனை நடத்தி வரு​வ​தாகவும், சில நாட்​களில் அமெரிக்கா போர் தொடுக்​கக்​கூடும் என்​றும் செய்​தி​ வெளியானது. ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால் அது ஆபத்​தான நடவடிக்​கை​யாக

இருக்​கும் என ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் கூறினர். இது 3-ம் உலகப் போராக உரு​வெடுக்​கும் அபா​யம் இருப்​ப​தாக​வும் ரஷ்யா தெரி​வித்​தது.

இதையடுத்​து, இஸ்​ரேலுக்கு ஆதர​வான ராணுவ நடவடிக்கை குறித்து 2 வாரங்​கள் கழித்து நடவடிக்கை எடுப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ‘‘ஈ​ரானை பேச்​சு​வார்த்​தைக்கு அழைத்து அணு ஆயுத விஷ​யத்​தில் முடிவை எட்ட இன்​னும் போதிய வாய்ப்பு உள்​ளது’’ என்று அவர் தெரி​வித்​துள்​ளார்.

பத்​திர​மாக நாடு திரும்​பிய மாணவர்​கள்: ஈரானில் 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் தங்​கி​யுள்​ளனர். இதில் பாதி பேர் தொழிற்​கல்வி பயிலும் மாணவர்​கள். அவர்​களை பத்​திர​மாக இந்​தி​யா​வுக்கு அழைத்​து வர நடவடிக்கை எடுக்​கு​மாறு அவர்​களது பெற்​றோர் மத்​திய அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​தனர். இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிர​மாக நடந்து வரும் நிலை​யில், இரு தரப்​பிலும் சரமாரியாக ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் ஏவப்​படு​வ​தால், சர்​வ​தேச விமான போக்​கு​வரத்​துக்கு ஈரான் தனது வான்​வழியை மூடி​யிருந்​தது.

இதனால், இந்​திய மாணவர்​களை அர்​மீனியா எல்லை வழி​யாக கத்​தா​ருக்கு அழைத்து வந்து, அங்​கிருந்து இந்​தி​யா​வுக்கு அழைத்து வரும் நடவடிக்​கையை வெளி​யுறவு அமைச்​சகம் மேற்​கொண்​டது. ஈரானில் இந்​திய மாணவர்​கள் 1,000 பேர் காத்​திருந்​த​தால், இந்​தி​யா​வுக்​காக தனது வான்​வழியை ஈரான் நேற்று திறந்​து​விட்​டது. இதையடுத்​து, ஈரானில் இருந்து இந்​திய மாணவர்​களை ஏற்றி வந்​த முதல்​ விமானம்​ நேற்​று இரவு டெல்​லி வந்​தடைந்​தது. இன்​றும்​, நாளை​யும்​ அடுத்​தடுத்​த வி​மானங்​களில்​ இந்​தி​ய மாணவர்​கள்​ ​நாடு ​திரும்​புகின்​றனர்.​

8 கி.மீ. சுற்றளவை நாசமாக்கும் ‘கொத்து’ – கொத்து (கிளஸ்டர்) குண்டு, மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும். அப்போது அதில் இருந்து வெளியேறும் ஏராளமான சிறு சிறு குண்டுகள் 8 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி விழுந்து, ஒவ்வொன்றும் தனித்தனியாக வெடிக்கும். குடியிருப்பு பகுதிகளில் இந்த குண்டு விழும்போது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கொத்து குண்டுகள் தரையில் விழுந்து வெடிக்காமல் கிடந்தாலும் ஆபத்துதான். வெடிக்காமல் கிடக்கும் கொத்து குண்டுகளை, யாராவது தொட்டாலோ,மிதித்தாலோ கண்ணிவெடி போல பயங்கரமாக வெடிக்கும். எனவே, ‘தரையில் கிடக்கும் சந்தேகத்துக்குரிய பொருட்களை தொட வேண்டாம். அது போன்ற பொருட்களை பார்த்தால், அவசர உதவி எண் ‘100’-க்கு போன் செய்ய வேண்டும் என மக்களுக்கு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.



Read More

Previous Post

ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை | Delhi classroom scam: ED raids 37 locations

Next Post

சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு | Makkal Osai

Next Post
சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு | Makkal Osai

சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin