• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இஸ்ரேல் பயணம் நிறைவு; இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி – 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாத் வஷேம் என்பது 2-ம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் ஆகும். அந்த நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்சாக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இஸ்ரேல் இடையிலான கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்

.இதன் பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இந்தியா-இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வணிகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எங்கும் இடமில்லை என்பதில் இந்தியாவும், இஸ்ரேலும் உறுதியாக உள்ளன. மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும். அது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காசா அமைதி ஒப்பந்தம் உள்ளிட்ட அமைதிக்கான முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவரை பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் மொத்தம் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.



Read More

Previous Post

RCB – RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

Next Post

Tamilmirror Online || ’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

Next Post
Tamilmirror Online || ’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

Tamilmirror Online || ’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin