ஈரானில் விமானப் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பான சூழல் உறுதிசெய்யப்பட்டதை அடுத்தும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தேவையான ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தும், விமானப் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் அச்சம்
ஈரானின் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் திட்டமிட்டபடி இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன என சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் அபுசர் ஷிரூடி கூறியுள்ளார்.

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால், முன்னதாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, வான்வெளியும் மூடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

