• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 2:52 PM IST

கேப்டன் ஸ்மித் மச்சார் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்திய நெதன்யாகு, அவரை இஸ்ரேலுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

News18
News18

ப்ளை துபாய் விமானத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது, உயிருக்குப் போராடிய 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பாராட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரை “உலகத்தின் நாயகன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விமானத்தில் தாக்குதல் நடந்த போது, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பூட்டப்பட்டிருந்த விமானி அறை கதவை கேப்டன் ஸ்மித் மச்சார் எவ்வாறு திறந்தார் என்பது குறித்து நெதன்யாகு கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த ஸ்மித் மச்சார், “வெளியே இருந்து விமானி அறையின் கதவைத் திறக்கப் பாதுகாப்புக் குறியீடு (Security Code) தேவைப்படும். ஆனால், காக்பிட்டின் உள்பகுதியிலிருந்து கதவைத் திறக்க ஒரு சாதாரண மேனுவல் திருகு மட்டுமே உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மத்தியிலும், தான் எப்படியோ சிரமப்பட்டு அந்தத் திருகின் அருகே சென்று அதைத் திருப்பி கதவைத் திறந்தேன்” என்று விளக்கினார்.

கதவு திறக்கப்பட்ட உடனேயே, வெளியே காத்திருந்த ஊழியர்களும் பயணிகளும் விரைவாகக் காக்பிட் பகுதிக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்திய தீவிரவாதியைக் கட்டுப்படுத்தி விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கேப்டன் ஸ்மித்தின் இந்தச் சமயோசிதமான முடிவையும் தைரியத்தையும் பாராட்டிய நெதன்யாகு, “நீங்கள் 170-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காப்பாற்றியதுடன், ஒரு தைரியமான விமானியும் பயணிகளும் இணைந்து தீய சக்திகளை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை உலகிற்கு அளித்துள்ளீர்கள். நீங்கள் இஸ்ரேலின் நாயகன், இந்தியாவின் நாயகன், ஒட்டுமொத்த உலகத்தின் நாயகன்!” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பொதுவாக இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் அந்நாட்டு குடிமக்களுக்கே முக்கியக் கௌரவங்கள் வழங்கப்படும். ஆனால், கேப்டன் ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவதாகத் தெரிவித்த நெதன்யாகு, இஸ்ரேலின் வரவிருக்கும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பங்கேற்குமாறு அவருக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இவ்விழாவில் பிரதமருடன் சேர்ந்து சிறப்பு விளக்கேற்றும் கௌரவமும் அவருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உரையாடலின் முடிவில், கேப்டன் ஸ்மித் மச்சார் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்திய நெதன்யாகு, அவரை இஸ்ரேலுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

இந்திய ரூபாய் நோட்டுகளில் இருப்பது மகாத்மா காந்தியின் உண்மையான புகைப்படமா? சுவாரஸ்ய பின்னணி…!! | Is Mahatma Gandhi’s Picture on Indian Currency Notes Real? The Fascinating Story Behind the Portrait

Next Post

தற்போதைய அரசியல் பல்லில்லா புலியானது ஜ.செ.க.

Next Post

தற்போதைய அரசியல் பல்லில்லா புலியானது ஜ.செ.க.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin