Last Updated:
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, திருப்பூரில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம் அடைந்துள்ளன.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, திருப்பூரில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம் அடைந்திருப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, துபாய்க்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது போர் பதற்றம் காரணமாக ஆடைகள் ஏற்றுமதி முடங்கி போயுள்ளது.
இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி திருப்பூரில் இருந்து துபாய் அனுப்பப்பட்ட ஆடைகள் பெரும்பாலும் விற்பனையாளர்களிடம் செல்லாமல் தேக்கமடைந்து இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலித்தீன் செயற்கை இழை தயாரிப்பிலும் 30 சதவிகிதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் பனியன் உற்பத்தி மேலும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.


