• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை | Iran attacks Israel: UN Chief calls to halt their escalating conflict

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை | Iran attacks Israel: UN Chief calls to halt their escalating conflict
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கள் நாட்டின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் – ஈரான் மோதலைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அதிகரிக்கும் மோதல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​களை இஸ்ரேல் திடீர் தாக்குதலில் அழித்தது. இதில், ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது ஈரான்.

பற்றி எரியும் ஈரான் நகரம்: இஸ்ரேலும், நாங்களும் திருப்பித் தாக்குவோம் என்று, ஃபைட்டர் ஜெட் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, தெஹ்ரானில் இருந்து 325 கிமீ தொலைவில் இருக்கும் ஜன்ஜன் நகரை தாக்கியுள்ளது. இதில் அந்த நகரமே பற்றி எரிகிறது.

மோதல் நீடிக்கும் நிலையில், “ஈரானின் நூற்றுக் கணக்கான ஏவுகணைகள் மத்திய டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இஸ்ரேலின் அயன் டோம்(Iron Dome) பாதுகாப்பையும் மீறி நாம் தாக்குதல் நடத்தியுள்ளோம்.” என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் சிவப்பு ரேகையை அத்துமீறிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பரிகாசம்: இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்துவரும் நிலையில், ஹமாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. ஹமாஸ் மூத்த தலைவர் இசாத் அல் ரிஷக், அயன் டோம் பற்றி பெருமை பேசிக் கொள்ளும் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தோற்றுவிட்டன. மத்திய கிழக்குப் பிராந்திய மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இஸ்ரேல் மூட்டிய நெருப்பு இஸ்ரேலை தாக்குகிறது. ஈரானின் பதில் தாக்குதல், ‘எந்த ஒரு அடாவடித்தனத்துக்கும் பதிலடி உண்டு, எந்த ஒரு அடக்குமுறைக்கும் தண்டனை உண்டு’ என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்கே, “அமெரிக்க ஆதரவும், அனுமதியும் இல்லாமல் இஸ்ரேல் இதுபோல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பேயில்லை.” எனத் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு: ஒரு பவுன் ரூ.74,560-க்கு விற்பனை | gold price today raise by rupees 200 per sovereign

Next Post

புதைத்து அழிக்கப்பட்ட படுகொலை சாட்சியங்கள்: ஐ.நா ஆணையாளருக்கு பறந்த அதிரடி கோரிக்கை

Next Post
புதைத்து அழிக்கப்பட்ட படுகொலை சாட்சியங்கள்: ஐ.நா ஆணையாளருக்கு பறந்த அதிரடி கோரிக்கை

புதைத்து அழிக்கப்பட்ட படுகொலை சாட்சியங்கள்: ஐ.நா ஆணையாளருக்கு பறந்த அதிரடி கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin