வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் நான்கு இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாக அந்நாட்டின் அவசர சேவை தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஹைஃபாவில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடம் மீது ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
450 கிலோகிராம் எடை கொண்ட ஏவுகணையின் வெடிபொருள் கட்டிடம் மீது நேரடியாகத் தாக்கியதை அடுத்து, சிலர் இன்னும் இடியாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏவுகணைச் சிதறல்கள்
இது தொடடர்பில் வெளியாகிய அறிக்கையில் “ஹைஃபாவில் குறைந்தது மூன்று இடங்களில் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்து, கணிசமான சேதத்தை ஏற்படுத்தின.

ஈரானிலிருந்து ஹைஃபா, வடக்கு இஸ்ரேலில் உள்ள கலிலீ மற்றும் நாட்டின் தெற்கில் உள்ள நெகேவ் ஆகியவற்றை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக தெரிவித்திருந்தது” என கூறப்பட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேலையும், அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள ஜோர்டான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

