கோலாலம்பூர், மார்ச் 21, 2026:
மலேசிய மாமன்னர் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிம் மற்றும் மகாராணி ராஜா ஜாரித் சோபியா ஆகியோர் இன்று இஸ்தானா நெகாராவில் உள்ள சூராவ் உத்தாமாவில் (Surau Utama) ஐடில்பித்ரி (நோன்புப் பெருநாள்) தொழுகையை மேற்கொண்டனர்.
இந்தத் தொழுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹித் ஹமிடி மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஹமிதா காமிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அமைச்சர்கள் டத்தோ பாஹ்மி பாட்சில், டாக்டர் சுல்கிப்ளி அகமது, டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
இஸ்தானா நெகாராவின் மத அதிகாரி டத்தோ முனிர் முகமட் சாலே இந்தத் தொழுகையை வழிநடத்தினார்.
‘ஷவ்வால்: சோதனைகளிலிருந்து எழுவோம், நம்பிக்கையில் இணைவோம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், பிரிவினையைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டது.
உலகளாவிய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, மக்கள் வீண் செலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொழுகைக்குப் பிறகு, மாமன்னரும் ராணியும் அங்கிருந்தவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பின் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
The post இஸ்தானா நெகாராவில் பெருநாள் தொழுகையில் மாமன்னர் தம்பதியினர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

