Last Updated:
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில்
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சொந்த ஊரில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிருப்தியை ஏற்படுத்தினார். அதேநேரம், நியூஸிலாந்து பவுலர்களை துவைத்து எடுத்த இஷான் கிஷன், பவுண்டரி சிக்சர் என வாணவேடிக்கை காட்டி சதம் விளாசினார்.
அவருக்கு உறுதுணையாக கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் 103 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து வீரர்கள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். 19.4 ஓவர்கள் முடிவில் 225 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சாக, பின் ஆலென் மட்டும் 80ரன்கள் சேர்த்தார்.
இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.


