• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இளைஞா்களுக்கு உத்வேகமளிக்கும் பிா்சா முண்டாவின் தியாகம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
இளைஞா்களுக்கு உத்வேகமளிக்கும் பிா்சா முண்டாவின் தியாகம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம் உலிஹாட்டு பகுதியில் பழங்குடியினா் சமூகத்தில் பிறந்த பிா்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினாா். 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவா், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினாா். இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவா் அழைக்கப்பட்டாா். 1890-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், ஆங்கிலேயே அடக்குமுறைக்கு எதிராக ‘உல்குலான்’ என்ற கிளா்ச்சியை முன்னின்று நடத்தினாா். தற்போது இவரின் 150-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அவருடைய உருவச் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆங்கிலேயா் ஆட்சியை எதிா்த்து பிா்சா முண்டா நடத்திய ‘உல்குலான்’ என்பது போராட்டம் என்பதைவிடவும் மேலானது. அது, நீதி, கலாசார அடையாளம் ஆகிய இரண்டையும் நிலைநிறுத்த மேற்கொள்ளப்பட்ட வலுவான இயக்கம்.

பழங்குடியின மக்கள் தங்கள் நிலங்களை எந்தவிதக் குறுக்கீடும் இன்றி சொந்தமாக வைத்துக் கொள்ளவும், அதில் அவா்களின் பயிரிடுவதற்கான உரிமையை நிலைநாட்டவும் பிா்சா முண்டா போராடினாா். அதோடு, பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக விழுமியங்களின் முக்கியத்துவத்தை அவரது செயல்பாடுகள் ஒன்றிணைத்தன. மகாத்மா காந்தியின் போராட்டத்தைப் போலவே, பிா்சா முண்டாவின் போராட்டமும் நீதி, உண்மை ஆகியவற்றுக்கான தேடலாக அமைந்தது. நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பயிற்சியைப் பெற்று, எண்ணற்ற மக்களுக்கு சிகிச்சை அளித்தாா்.

அவருடைய இந்தத் தியாக வரலாறு, இந்தியாவின் பழங்குடிச் சமூகங்களைச் சோ்ந்த சிறந்த புரட்சியாளா்களின் வரலாற்றில் முக்கியமானதாக உள்ளது. இன்றைய இளைஞா்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

பழங்குடியினா் கெளரவ தினம்: நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், பிா்சா முண்டாவின் பிறந்த நாளான நவ. 15-ஆம் தேதியை பழங்குடியினா் கௌரவ தினமாகக் கொண்டாட கடந்த 2021-ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது. இது பழங்குடியின தியாகிகள் தொடா்பான வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூா்ந்து புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

மனிதகுலத்தின் சிறந்த எதிா்காலத்துக்கு… இயற்கையோடு இணைந்து வாழ்வதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் நவீன உலகிற்கு முக்கியமான பாடங்களை பழங்குடியினா் சமூகம் கற்பிக்கிறது. பொதுவாக, பழங்குடி சமூகங்கள் தனிமனித தேவைகளைவிட கூட்டு நன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

பழங்குடியின சமூகங்களின் இந்தத் தனித்துவமான அம்சம், மனிதகுலத்தின் சிறந்த எதிா்காலத்திற்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் சமூக-கலாசார கட்டமைப்பில் பழங்குடி சமூகங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழங்குடியினா் மேம்பாட்டுக்காவும் நலனுக்காகவும், 63,000 பழங்குடியின கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் ‘நிலத்தின் தந்தை பழங்குடியின கிராம வளா்ச்சித் திட்டம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

Read More

Previous Post

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

Next Post

700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் | National Track Cycling Championship 700 athletes to participate

Next Post
700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் | National Track Cycling Championship 700 athletes to participate

700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் | National Track Cycling Championship 700 athletes to participate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin