• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இளைஞர்களே தயாரா? லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ரெடி.. டிகிரி கூட தேவையில்லை..!! | Meesho to create over 10 Lakh Seasonal Jobs during India’s Festive Shopping Season

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இளைஞர்களே தயாரா? லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ரெடி.. டிகிரி கூட தேவையில்லை..!! | Meesho to create over 10 Lakh Seasonal Jobs during India’s Festive Shopping Season
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இளைஞர்களே தயாரா? லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ரெடி.. டிகிரி கூட தேவையில்லை..!!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்க உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஆயுதபூகை, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்த 6 மாதங்களுக்கு பண்டிகை கலைகட்ட போகுது. இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாததை விட லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

வேலை தேடி கொண்டிருக்கும் நபர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், பார்ட் டைம் வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இது பெஸ்ட்டான ஒரு காலம் என கூறலாம். ஏனெனில் இந்த வேலைவாய்ப்புகளூக்கு டிகிரி கூட தேவையில்லை. சொந்தமாக பைக் அல்து ஸ்கூட்டி இருந்தால் போதும். இந்தியாவில் உணவு டெலிவரி மட்டுமில்லாமல் குயிக் காமர்ஸ் எனப்படும் மளிகை பொருட்கள் டெலிவரி மற்றும் ஈ காமர்ஸ் டெலிவரி வேலைகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு டிமாண்ட் அதிகமாகும்.

இளைஞர்களே தயாரா? லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ரெடி.. டிகிரி கூட தேவையில்லை..!!

மக்கள் துணி மணி, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பண்டிகை கால பொருட்களை பெரும்பாலான ஆன்லைன் வழியாகவே வாங்குகின்றனர். சௌகரியமாக வாங்கலாம், பல தளங்களில் விலைகளை ஒப்பிட்டு வாங்கலாம் என்பதால் பெரும்பாலான மக்கள் படிப்படியாக ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு தான் மாறுகின்றனர்.

இந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் தொடங்கி பிப்ரவரி வரை தொடர்ச்சியாக பண்டிகை வருவதால் இந்த பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு முன்பை விட ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. எனவே டெலிவரி பார்டன்ர்களுக்கான தேவையும் அதிகமாகியுள்ளது.

எனவே பிரபல மீஷோ (Meesho) நிறுவனம் 10 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மீஷோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வேலைவாய்ப்புகள் மீஷோவின் விற்பனையாளர்கள் மற்றும் அதன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. மீஷோ தளத்தில் உள்ள விற்பனையாளர்கள், பண்டிகை கால தேவைக்கு ஏற்ப தங்கள் தயாரிப்புகளை அதிகரிக்கவும், கையிருப்புகளை நிர்வகிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுமார் 6.5 லட்சம் தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் பேக்கேஜிங் உற்பத்தி மற்றும் கிடங்கு பணிகளில் ஈடுபடுவார்கள்.

மீஷோவின் சொந்த தளவாட பிரிவான வால்மோ மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் பார்டனர்களுடன் இணைந்து, டெலிவரி பணிகளை வேகப்படுத்த உள்ளது. இதற்காக சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் டெலிவரி, வரிசைப்படுத்துதல், ஹப் செயல்பாடுகள் மற்றும் மேற்பார்வையாளர் பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளது.

இது குறித்து மீஷோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்களுக்கும், லாஜிஸ்டிக்ஸ் பார்டனர்களுக்கும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற இது உதவும் என தெரிவித்தார். குறிப்பாக, மீஷோ தளத்தில் உள்ள சிறிய நகரங்களை சேர்ந்த விற்பனையாளர்களுக்கு, பண்டிகை கால விற்பனைதான் அவர்களின் ஆண்டு வருவாயின் பெரும் பகுதியை ஈட்டித் தருகிறது என்கிறார்.

இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தாண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களும் டெலிவரி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. குயிக் காமர்ஸ் தளங்களான இன்ஸ்டாமார்ட், செப்டோ, பிளிங்கிட் போன்றவையும் டெலிவரியை பலப்படுத்த பண்டிகை காலத்திற்கு என்றே ஆட்களை தேர்வு செய்ய தயாராகிவருகின்றன.

Share This Article

English summary

Meesho to create over 10 Lakh Seasonal Jobs during India’s Festive Shopping Season

இளைஞர்களே தயாரா? லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ரெடி.. டிகிரி கூட தேவையில்லை..!! / Meesho expects its seller and logistics ecosystem to create more than 10 lakh temporary jobs during the festive shopping season. Around 6.5 lakh roles are expected across its seller network in packaging, manufacturing, warehousing and inventory management.

Story first published: Saturday, August 22, 2026, 13:30 [IST]

Other articles published on Aug 22, 2026

Read More

Previous Post

தண்ணீரை விட்டு தரைக்கு வந்தால் சிக்கல்.. குளத்திலேயே வசிக்கும் 16 வயது சிறுவன்.. வினோத நோயால் அவதி | 16 year old boy lives in pond due to severe burning sensation in his body in west bengal

Next Post

எல்லை தாண்டிய புகைமூட்டம்: ஆசியான் நாடுகள் இணைந்து செயலாற்ற மலேசியா அவசர அழைப்பு! | Makkal Osai

Next Post
எல்லை தாண்டிய புகைமூட்டம்: ஆசியான் நாடுகள் இணைந்து செயலாற்ற மலேசியா அவசர அழைப்பு! | Makkal Osai

எல்லை தாண்டிய புகைமூட்டம்: ஆசியான் நாடுகள் இணைந்து செயலாற்ற மலேசியா அவசர அழைப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin