இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை குவித்து கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டி வரலாற்ரில் 3,000 ரன்களை குவித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் சுப்மன் கில். நேற்று (10.04.2024) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சுப்மன் கில்லுக்கு முன்பு மிகக் குறைந்த வயதில் 3,000 ரன்களை குவித்த விளையாட்டு விரராக விராட் கோலி வளம் வந்தார். விராட் கோலி தனது 26 வயதில் இந்த சாதனையை படைத்த நிலையில் சுப்மன் கில் தனது 24வது வயதில் அதை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் உள்ளார். அவர் 26 வயது 320 நாட்களில் இந்த சாதனை படைத்தார். இதேபோல சுரேஷ் ரெய்னா 4வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 5வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் ஷர்மா இந்த சாதனையை நிகழ்த்தியபோது அவருக்கு வயது 27.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)