• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இளம் வயதில் சீக்கிரம் கோடீஸ்வரனாக மாறணுமா? – சூப்பர் டிப்ஸ் தரும் சக்சஸ் பிசினஸ்மேன்! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இளம் வயதில் சீக்கிரம் கோடீஸ்வரனாக மாறணுமா? – சூப்பர் டிப்ஸ் தரும் சக்சஸ் பிசினஸ்மேன்! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூட்டு முதலீட்டைத் தேர்வு செய்வதன் மூலம் 20, 30 வயது கொண்ட இளம் தலைமுறையினர், கோடீஸ்வரராக மாற முடியும் என்று ஷாதி நிறுவனர் அனுபம் மிட்டல் கூறுகிறார்.

20, 30 வயதில் உள்ள இளைஞர்கள் செல்வம் சேர்ப்பதற்கான எளிய ரகசியம் ‘கூட்டு முதலீடு’ தான் என்று ஷாதி டாட்காம் நிறுவனர் அனுபம் மிட்டல் கூறுகிறார். செல்வத்தைச் சேர்ப்பது ஒன்றும் அதிசயமான அல்லது கஷ்டமான விஷயம் ஒன்றும் அல்ல, அது மிகவும் எளிய மற்றும் ஒழுக்கமான பழக்கம் தான் என்று பிரபல ஷாதி இணையதளத்தின் நிறுவனரும், பிரபல முதலீட்டாளருமான அனுபம் மிட்டல் கூறுகிறார்.

இளம் தலைமுறையினர், குறிப்பாக 20 மற்றும் 30 வயதுடையவர்கள், சரியான நிதி திட்டமிடலுடன் கூடிய, கூட்டு முதலீட்டின் சக்தியைப் பயன்படுத்தினால், கோடீஸ்வர அந்தஸ்தை அடையலாம் என்று அவர் வலியுறுத்துகிறார். அதாவது, சிறிய தொகையிலிருந்து தொடங்கி, தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், அந்த முதலீடு சில பல வருடங்களுக்குப் பிறகு பெரிய செல்வமாக வளர்ந்து நிற்கும். “இது மாயம் ஒன்றும் இல்லை, ஆனால் ஒழுக்கமும், பொறுமையும் அதற்கு தேவைப்படும்” என்று மிட்டல் கூறினார்.

பெரிய பணக்காரராக வேண்டும், நிறைய செல்வம், சொத்து சேர்க்க வேண்டும் என்பது அனைவருக்குமான பொதுவான கனவாகும். சிலர் அதை கடின உழைப்பின் மூலம் அடைகிறார்கள், சிலர் புத்திசாலித்தனமான முதலீட்டின் மூலம் பெறுகிறார்கள். ஆனால், அனுபம் மிட்டல், “நிதி பற்றி ஞானத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரராக முடியும்” என்று தான் நம்புவதாக கூறுகிறார்.

இந்த விஷயத்தில் இளைஞர்கள், பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார். அதாவது, “நம்முடைய பெற்றோர் அல்லது பாட்டி – தாத்தா கூறிய நிதி சம்பந்தப்பட்ட அறிவுரைகள் மற்றும் பழக்கங்களில் நிறைய ஞானம் இருக்கிறது. அவர்களின் அனுபவம் தான் நமக்கு சிறந்த வழிகாட்டி, எனவே அவர்களது அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது” என்று மிட்டல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அவர் அளித்த நேர்காணலில், செல்வத்தைச் சேர்ப்பதற்கான ரகசியம் குறித்து கேட்ட போது மிட்டல் சிரித்தபடி, “முதலீடு சம்பந்தமான ஒவ்வொரு கேள்விக்கும் நான் தரும் ஒரே பதில், அது நாம் மேற்கொள்ளும் முதலீட்டை பொறுத்தது தான்” என்று கூறினார். அதாவது, ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும், வருமானமும், நிதி ஆபத்தை எதிர்கொள்வதும் மாறுபடும் என்பதால், ஒரே மாதிரியான பதில் அனைவருக்கும் பொருந்தாது என்று அவர் கூறுகிறார்.

மிட்டல் மேலும் விளக்குகையில், “20-கள் மற்றும் 30-களின் ஆரம்பத்தில் உள்ள இளம் தலைமுறையினர் ‘கூட்டு முதலீட்டை’ புரிந்துகொள்வது மிக முக்கியம். மனித மூளை, கூட்டுத்தொகையின் வலிமையை உணர்வதில் சிரமப்படுவதால், பலர் விரைவான செல்வத்தைத் தேடி தவறான வழியில் செல்கிறார்கள்” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கணிப்புப்படி, “நீங்கள் 20 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், 100 கோடி ரூபாயோ அல்லது 10-20 மில்லியன் டாலர்களோ சேர்க்க முடியும்.” அதே நேரத்தில், “தனிப்பட்ட பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பி, ஆபத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம். SIP-கள் மூலம் திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள், கூட்டுத்தொகையின் சக்தி உங்களது முதலீட்டை மெதுவாகவும், உறுதியாகவும் வளர்த்துத் தரும்.” என்கிறார்.

தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து மிட்டல் நகைச்சுவையுடன் கூடிய தனது அனுபவத்தைப் பகிர்ந்தார். அதில், “என் மாமனார் என் மனைவியிடம் தங்கம் வாங்கச் சொன்ன போது, அது ‘கூட்டு மதிப்பு’ தராது என்பதால் நான் அதை எதிர்த்தேன். ஆனால், அதன் விலை மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்ந்தது! இப்போது அவரிடம் எப்படி எதிராகப் பேச முடியும்?” என்றும், நம் முன்னோர்கள் கூறியது போல், “தங்கம் வாங்குங்கள், வீடு வாங்குங்கள்” என்ற அறிவுரை வெறும் பழமொழி மட்டுமல்ல, நிதியைச் சேர்ப்பதற்கான சிறந்த நுண்ணறிவின் வெளிப்பாடாகும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும் அவர், “போதுமான அளவு நிதி இருக்கும் போது, உங்களுக்கென்று சொந்த வீடு ஒன்றை வாங்குங்கள். உங்கள் தலைக்கு மேல் சொந்த கூரை ஒன்று இருந்தால், வாழ்க்கையில் பெரிய ஆபத்துகளை எதிர்த்து நிற்கும் தைரியம் உங்களுக்கு வரும்” என்கிறார்.

இவ்வாறாக, அனுபம் மிட்டலின் கருத்துப்படி, கோடீஸ்வரனாக மாறுவதற்கு ரகசியம் என்று எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக, காலத்திற்கு ஏற்ப கட்டுப்பாடு, தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கம் மற்றும் கூட்டு முதலீட்டின் மீதான நம்பிக்கை தான் முக்கியமாகும். எனவே, “செல்வம் என்பது திடீரென கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்துவிடாது, ஆனால் அதை ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு முதலீட்டின் மூலமும் மெதுவாகக் கட்டியெழுப்பலாம்” என்று அனுபம் மிட்டல் தனது அனுபவத்தின் மூலம் கூறுகிறார்.

Read More

Previous Post

6-0 சைகை… AK-47… களத்தில் ஆப்ரேஷன் சிந்தூரை எதிரொலித்த பாகிஸ்தான்!

Next Post

வெறும் ரூ.20 போதும்.. உலகிலேயே மிகவும் மலிவான ஹோட்டல் இதுதான்.. எங்குள்ளது தெரியுமா? | உலகம்

Next Post
வெறும் ரூ.20 போதும்.. உலகிலேயே மிகவும் மலிவான ஹோட்டல் இதுதான்.. எங்குள்ளது தெரியுமா? | உலகம்

வெறும் ரூ.20 போதும்.. உலகிலேயே மிகவும் மலிவான ஹோட்டல் இதுதான்.. எங்குள்ளது தெரியுமா? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin