வயது என்பது வெறும் எண் என்பது ஒரு புகழ்பெற்ற பழமொழியாகும். குழந்தைகள் பொதுவாக தங்கள் படிப்பு மற்றும் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படும் வயதில், தனக்கென ஒரு சொந்த நிறுவனத்தை நிறுவி இந்த குழந்தை அசத்தியுள்ளார். திலக் மேத்தா இந்தியாவின் இளம் வயது தொழிலதிபர் மற்றும் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர். இவர் தனது 13 வயதில் சொந்தமான நிறுவனம் ஒன்றை தொடங்கி இந்திய மக்களை ஆச்சரியத்திற்குள் மூழ்கடித்தார். 13 வயதில் ஒரு அசாதாரண சாதனையைப் படைத்த திலக் மேத்தாவைப் பற்றி பார்ப்போம்.
ஒரு முறை தனது மாமா வீட்டுக்குச் சென்றிருந்த திலக் மேத்தா, அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது தான், தனது புத்தகங்களை மாமா வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டது அவருக்குத் தெரியவந்தது. பின்னர், தனது பார்சலை ஒரே நாளில் டெலிவரி செய்யுமாறு பல்வேறு பார்சல் ஏஜென்சிகளிடம் கேட்டுள்ளார். அப்போது புத்தகங்களை டெலிவரி செய்வதற்கு கூடுதல் நாட்கள் எடுக்கும் என்றும், ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என்றால் கூடுதல் செலவு ஆகும் என்றும் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட திலக் மேத்தா, அவசர காலங்களில் எப்படி ஒரு பார்சலை விரைவாக எடுத்துச் செல்வதற்கான வழிகளைப் பற்றி அவரை சிந்திக்கத் தூண்டியது.
இதன் காரணமாக நகரத்திற்குள் உடனடியாக டெலிவரி சேவைகளை வழங்கும் ‘பேப்பர் என் பார்சல்ஸ்’ நிறுவனத்தை நிறுவ அவரைத் தூண்டியது. மும்பையில் குறைந்த செலவில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு டெலிவரி செய்யப்படும் டப்பாவாலா நிறுவனத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார் திலக் மேத்தா. ஆரம்ப காலத்தில் இந்த தொழில் யோசனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக தந்தை வழங்கிய நிதியுடன் சேர்த்து, திலக் மேத்தா டப்பாவாலாக்களுடன் கைகோர்த்து குறைந்த செலவில் பார்சல்களை அனுப்பும் சேவையை செய்தார். பின்னர், அவர் 2018ஆம் ஆண்டில் ஒரு ஆன்லைன் தளத்தைத் தொடங்கி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸை திலக் மேத்தா தொடங்கினார்.
இதையும் படிக்க:
Atal Vayo Abhyuday Yojana : மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் செய்தி – மத்திய அரசு அதிரடி திட்டம்!
அசைக்க முடியாத உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும், மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு சென்ற நிறுவனம் ரூ.100 கோடி வருவாயை எட்டியது. அவரது நிறுவனத்தில் தற்போது 200க்கும் மேற்பட்ட நேரடி ஊழியர்கள் மற்றும் 300 டப்பாவாலாக்கள் உள்ளனர். மேலும், தினசரி 1200 டெலிவரிகளை செய்கின்றனர்.
இதையும் படிக்க:
தமிழ்நாட்டில் சொகுசு கார்களை வாங்குவோர் எண்ணிக்கை 50% ஆக உயர்வு!
இதற்கிடையில், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி திலக்கின் நிகர மதிப்பு ரூ.65 கோடியைத் தாண்டியுள்ளது, இதனால் அவரது மாத வருமானம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு திலக் மேத்தாவின் இந்த சாதனையானது 13 வயது சிறுவனின் கடினமான உழைப்பு, தளராத ஆர்வம் மற்றும் உறுதியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
