Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளம்பெண்ணை நாலைந்து பைக்குகளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளம்பெண்ணை நாலைந்து பைக்குகளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டுக்குச் செல்கிறேன் எனக் கூறி விட்டு, அவர் புறப்பட்டுள்ளார். போகும் வழியில் இளம்பெண் தனியாக நடந்து சென்றதை நோட்டமிட்ட கும்பல், லிப்ட் தருகிறோம் வரியா? எனக் கூறி, நாலைந்து பைக்கில் வழிமறித்து அச்சுறுத்தியுள்ளனர்.
ஆபாச சைகளில் இளம்பெண்ணை முகம் சுழிக்க வைத்தவர்கள், பைக்கில் அவரை கடத்த முயன்றதாகவும் தெரிகிறது. ஆனால் வாய் பேச முடியாததால் கத்தி கூச்சலிட்டு யாரையும் உதவிக்கு அழைக்க முடியாமல் மறுங்கிய இளம்பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அவர்களின் கையில் சிக்கிய அந்த பெண்ணை ஆட்கள் நடமாட்டம் இல்லா வயலுக்குள் இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் இளம்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து தேடியுள்ளனர். அதில் வயலில் மயக்கிய நிலையில் இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண் தப்பியோட முயன்ற காட்சிகள், மாவட்ட எஸ்.பி.யின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
உபி – யில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்க, அதில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அங்கூர் வர்மா மற்றும் ஹர்ஷித் பாண்டே ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சில வக்கிர மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளம்பெண்ணை பைக்கில் சுற்றி வளைத்து அச்சுறுத்தும் போது அவ்வழியாக பொதுமக்கள் சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யாரும் இளைஞர்களைக் கண்டித்து இளம்பெண்ணை மீட்க முயலவில்லை. சாலையில் ஓடும் போது அதே நிலைதான்.. யாருக்கு என்ன ஆனால் என்ன? என்ற எண்ணத்தோடு கடந்து சென்றதாகத் தெரிகிறது.
மாவட்ட எஸ்.பியின் வீடு வழியாக, இளம்பெண் ஒருவர் ஓடுகிறாரே அவருக்கு என்ன ஆனது என, யாராவது தடுத்து நிறுத்தி கேட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பாரோ என்னவோ. தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு எப்போதுதான் சுதந்திரம் கிடைக்கும் என்ற வேதனைக்கு ஆளாக்கியுள்ளது, இக்கோர சம்பவம். உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என நாடு முழுவதும் பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
August 13, 2025 5:56 PM IST


