தின்பண்டம் முதல் திருவிழா வரை பலவற்றுக்கும் புகழ்பெற்றது மதுரை. அப்படிப்பட்ட மதுரையில் உருவாக்கப்பட்டு புவிசார் குறியீடு என்னும் அங்கீகாரம் பெற்றது தான் சுங்குடி சேலை. அந்த பாரம்பரியத்தைத் தற்போதும் தொடர்ந்து பின்பற்றி வருவது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக உருவாகிய திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சின்னாளப்பட்டி தான்.
இந்த சின்னாளப்பட்டி புடவையில் மகிமை குறித்து அந்தக்காலத்தில் பாடல்களே உள்ளது. பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படத்தில் சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் வரிகளிலிருந்து சின்னாளப்பட்டி சேலை எவ்வளவு மவுசு வாய்ந்தது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
அந்த காலத்தில் சின்னாளப்பட்டியில் கண்டாங்கி சேலைகள் நெய்யப்பட்டதாகவும் தற்போது பாரம்பரியமாக சுங்குடி சேலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக்காலம் முதல் இந்த காலம் வரை திண்டுக்கல், மதுரை பகுதிகளில் திருமண வைபவங்களில் இந்த சுங்குடி சேலை முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: Jackfruit Season: யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது… மருத்துவர் சொல்வது என்ன..?
சேலைகளில் தேவையான வடிவமைப்பிற்கு ஏற்ப முடிச்சுகளை உருவாக்கி சாயம் ஏற்றி தயாரிக்கப்படுவது தான் சுங்குடி சேலை. அது தயாராகும் முறையின் காரணமாகத் தான் சுங்குடி சேலை என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
இந்த சுங்கடி சேலைகளை இரண்டு வகையில் வடிவமைக்கின்றனர். ஒன்று வண்ணச் சாயங்கள் அச்சிட்டு வடிவமைக்கின்றனர். மற்றொன்று மெழுகை உருக்கி சூடாகச் சேலைகளில் அச்சிடுகின்றன. இங்குத் தயாரிக்கப்படும் சேலைகளானது சேலம், மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பொதுவாக சுங்குடி சேலை என்பது பாட்டிமார்கள் அனைவராலும் விரும்பி கட்ட கூடிய சேலையாகும். எவ்வளவு தான் பேஷன் சேலைகள் வந்தாலும் பாரம்பரியமான சுங்குடி சேலையானது இன்றும் பலரால் வாங்கப்படுகிறது. பெரும்பாலான இல்லத்தரசிகள் இந்த சுங்குடி சேலைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இதையும் படிங்க: என்றும் இளமையாக மாற்றும் இளநீர்.. சரும பொலிவுக்கு இதை செய்தால் போதும்!
அதற்கு காரணம் இந்த சுங்குடி சேலை பாரம்பரியத்துடன் தற்காலத்திற்கும் ஏற்ற வகையில் நவீனமான டிசைன்களிலும் கூட உருவாக்கப்படுகின்றன. அதனால் தான் அந்தக்காலத்துப் பாட்டிகள் முதல் இந்த காலத்துக் கல்லூரி மாணவிகள் வரை இந்த சுங்குடி சேலைகளை விரும்பி கட்டுகின்றனர்.
நல்ல காற்றோட்டத்துடன் இருப்பதால் இந்த சேலைகளை இல்லத்து அரசிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கால ஓட்டத்தில் நவீன மயமாதலால் பல பாரம்பரிய அடையாளங்கள் நம் மத்தியிலிருந்து மறைந்து போன நிலையிலும், இன்னமும் இந்த பாரம்பரிய சுங்குடி சேலையை மக்கள் மத்தியில் மங்கா புகழோடு வைத்திருப்பதில் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த பல தொழிலாளர்களின் பங்கு உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
