திமுகவில் வகித்த பொறுப்புகள்
திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த துரைமுருகன், கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிறகு 2018-ல் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டடார். 2020-ல், பேராசிரியர் க.அன்பழகனின் மறைவை அடுத்து, திமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவி, திமுகவில் மிகவும் அதிகாரம் மிக்கதாக கருதப்படுகிறது, ஏனெனில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், மற்றும் அமைப்பு முடிவுகள் பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

