இலங்கை வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த பிரதமர் தினேஷ் குணவர்தன கிளிநொச்சியில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அப்போது வடக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைவர்களும் மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது, பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துவது குறித்து சுமுகமாக கலந்துரையாடினர்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண நூலகத்திற்கு அதிகமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய பிரதமர் குணவர்தன, வடக்கு மாகான பாடசாலைகளுக்கு கல்வி வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அமைச்சர் தேவானந்தனின் தந்தையும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக செயற்பட்டவர் என்பதை பிரதமர் தினேஷ் குணவர்தன, நினைவு கூர்ந்தார். புதிதாக புத்துயிர் பெற்ற இந்த நல்லுறவில் பிரதமர் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சாலை மார்க்கமாக பயணித்தார். அவருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, இரு இடங்களிலும் அவருக்கு அரவணைப்புடனும், அன்புடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
“வடக்கு பகுதியை வளர்ச்சி அடைய செய்வதற்கு நாங்கள் எங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் மற்றும் ஒவ்வொரு AG பிரிவுக்கும் மாகாண நிதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன,” என்று பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி அளித்தார்.
வடக்கில் பிரச்சனைகளை முன்வைத்து, அதற்கு தீர்வு காண பங்களித்த அனைத்து அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. இதை அடைவதற்காக ஆளுநர் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எம்.பி.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும், வளர்ச்சி திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக பிரதமருக்கு உறுதியளித்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
