இலங்கை கொக்குக்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டது. அங்கு, தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் கடந்த ஓராண்டாக மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக 3-வது கட்டமாக கடந்த 5 ஆம் தேதி அகழ்வு பணிகளை தொடங்கினர். இந்த அகழ்வு பணியின்போது மனிதப் புதைகுழியில் இருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டு, அவை வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், அங்கிருந்து மனித எலும்புக் கூடுகளை வெளியேற்றும் பணி முடிவடைந்துவிட்டதாக தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
ரீல்ஸ் மோகத்தால் இன்ஸ்டா பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்… வாரிசு பட அருவியில் நடந்தது என்ன?
இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
