இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, உதவி ஆளுநர் சி. அமரசேகர, மற்றும் உதவி ஆளுநர் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் முறையே 24 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதியமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் இவர்கள் இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R

