இலங்கைக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மோதவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜனவரி 22, 24, 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ரி20 கிரிக்கெட் தொடர்
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜனவரி 30ஆம் திகதியும் பெப்ரவரி 1, 3ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் இரண்டு அணிகளுக்கும் ரி20 உலகக் கிண்ணத்துக்கான ஒத்திகை போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |








