குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக மரணம்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று காரணமாக மரணம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற விடுதி தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டபோது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

&w=1200&resize=1200,675&ssl=1)