Last Updated:
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 பந்துகளில் 1 சிக்சர் 9 பவுண்டரியுடன் 68 ரன்கள் குவித்தார்.
இலங்கைக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது.
குறிப்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 பந்துகளில் 1 சிக்சர் 9 பவுண்டரியுடன் 68 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இலங்கை அணியின் வீராங்கனைகள் களம் இறங்கினர்.
தொடக்க வீராங்கனை ஹசினி பெரேரா 65 ரன்களும், 3 ஆவது களம் இறங்கிய இமேஷா துலானி 50 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீராங்கனைகள் இந்திய அணியின் சிறப்பான பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ரன்கள் சேர்க்க திணறினர்.
Dec 30, 2025 11:04 PM IST


