நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் டிட்வா புயல், நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் (Ministry of Foreign Affairs) தகல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் அமெரிக்க டொலர்
இதனிடையே, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் மீட்புப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுடனும் தாம் உடன் நிற்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கவுள்ளதாக மாலைதீவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

