இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந்தும் அதிகரிப்புப் போக்கைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவாட் (MW) ஆக இருந்த தினசரி மின்சாரத் தேவை, செப்டம்பர் 1 ஆம் திகதி 2,936 மெகாவாட் ஆகக் குறைந்துள்ளது.
மின்சாரத் தேவை
இது செப்டம்பர் 2 ஆம் திகதி 2,934 மெகாவாட் ஆகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி மேலும் சரிவடைந்து 2,920 மெகாவாட் ஆகவும் பதிவாகியுள்ளது.
மின்சாரத் தேவை குறைந்த போதிலும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரமாக (GWh) இருந்த தினசரி மின் உற்பத்தி, செப்டம்பர் 1 ஆம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

