இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று (23.04.2026) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இந்தநிலையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,538 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

