
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.
309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே நேரத்தில், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 68 பேரும், குருநாகலில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 64 பேரும், பதுளையைச் சேர்ந்த 53 பேரும், குருநாகலைச் சேர்ந்த 35 பேரும் காணாமல் போயுள்ளனர்.

