• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி | There is no place for racism and sectarianism in Sri Lanka: President Anura Kumara Dissanayake

GenevaTimes by GenevaTimes
November 22, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி | There is no place for racism and sectarianism in Sri Lanka: President Anura Kumara Dissanayake
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் என்பிபி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 18-ம் தேதி இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். அதிபர், பிரதமர் உட்பட 22 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

இந்த சூழலில் 10-வது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசாநாயக்க உரையாற்றினார். அவர் கூறியதாவது: அனைத்து இன மக்களும் என்பிபி கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். இதன்மூலம் தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை.

குற்றங்களை தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிபர் உட்பட அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். சர்வதேச செலாவணி நிதியத்தின் செயல்திட்டத்துடன் இலங்கை பொருளாதாரத்தை மீட்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அதிபர் அனுர குமார திசாநாயக்க பேசினார்.

இலங்கை நாடாளுமன்ற அவையின் புதிய தலைவராக என்பிபி கூட்டணியை சேர்ந்த கலாநிதி அசோக ரன்வல தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முன்னிலையில் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.



Read More

Previous Post

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நடக்கும் இடம், நேரம், லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற விவரங்கள் உள்ளே

Next Post

சவுதியில் சட்டம் கடுமையா இருக்குதுப்பா! ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை | Makkal Osai

Next Post
சவுதியில் சட்டம் கடுமையா இருக்குதுப்பா! ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை | Makkal Osai

சவுதியில் சட்டம் கடுமையா இருக்குதுப்பா! ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin