• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு | Sri Lanka President Dissanayake picks Harini Amarasuriya as Prime Minister

GenevaTimes by GenevaTimes
September 24, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு | Sri Lanka President Dissanayake picks Harini Amarasuriya as Prime Minister
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16-ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய (54) பிரதமராக பதவியேற்றார். 1994-ல் இலங்கையின் பிரதமராக பதவியேற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க-வுக்குப் பிறகு அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக ஹரிணி பதவியேற்றுள்ளார். இவர் அந்நாட்டின் 3-வது பெண் பிரதமராவார். இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன, அதிபர் தேர்தலைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக ஹரிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரிணி அமரசூரிய, 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார். அப்போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஹரிணிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2024 தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதை அடுத்து, முன்பு அறிவித்தபடி ஹரிணிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

2009-ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மகள் நீதி கேட்டு இலங்கையின் புதிய அதிபருக்கு கோரிக்கை | The daughter of a journalist who was killed in the civil war petition to the President of Sri Lanka

Next Post

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பார்வை என்ன? | White house and US president Biden reaction on Israel, Gaza and Lebanon

Next Post
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பார்வை என்ன? | White house and US president Biden reaction on Israel, Gaza and Lebanon

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பார்வை என்ன? | White house and US president Biden reaction on Israel, Gaza and Lebanon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin