இலங்கையின் பிரபல தனியார் வங்கியொன்றின் ATM அட்டைகள் கடந்த சில மணிநேரங்களாக செயலிழந்துள்ளன.
இந்த நிலையில், குறித்த வங்கியின் பெருந்தொகை வாடிக்கையாளர்கள், ATM மூலமாக பணம் எடுக்க முடியாமல் தடுமாறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டும் அதனை அடைய முடியாமல் உள்ளது.
அத்தோடு, வங்கியின் சமூக ஊடக தள பக்கத்தில் மக்கள் விசனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.