• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
தமிழகம்
/
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த தவெக நாகை மாவட்ட நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


இலங்கைக்குக் கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட நான்கு பேரை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

நாகையிலிருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் திருச்சி மண்டலப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று காலை ஆறு மணியளவில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுகன் (27) என்பவரது வீட்டுக்குப் பதினாறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது. அங்கு சோதனை நடத்திய அவர்கள், சுகன், அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டைச் சேர்ந்த நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவரே இதன் மூளையாகவும் பின்புலமாகவும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் குழு பூபாலனின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டது, அங்கு போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் பார்த்திபன் (29), பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சதீஷ் (30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பூபாலனின் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இதைப் பூபாலன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, பூபாலன், சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய நால்வரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து நூற்று முப்பத்தைந்து கிலோ மெத்தம்பெட்டமைனைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட நால்வரையும் நாகை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நூற்று முப்பத்தைந்து கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நூறு கோடி முதல் நூற்று முப்பத்தைந்து கோடி ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூபாலன் சிக்கிய பின்னணியைப் பொறுத்தவரை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை அண்மையில் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பூபாலன் மற்றும் சுகன் ஆகியோரின் தொடர்பு தெரியவந்தது, அதைத் தொடர்ந்து இருவரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். 

இந்த நிலையில், கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கியிருந்தார் எனவும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து படகையும், காரைக்காலில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிவேக இயந்திரத்தையும் வாங்கிச் சென்றது குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நபரைச் சுற்றிவளைத்து விசாரித்துள்ளனர். கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தத் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனைக் கட்சியை விட்டு நீக்கி, தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த பூபாலன், பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய போதைப் பொருள் கட்டுப்பாடு உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

எனவே, கட்சியின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்ட காரணத்தால், பூபாலன் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். எனவே நிர்வாகிகள் யாரும் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்கள்

Read More

Previous Post

நிக் நஸ்மியை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்த பெர்சாமா | Makkal Osai

Next Post

கணவர் படுக்கையில் விஷமில்லா பாம்பை ஏவி.. அடுத்த ரூமில் கூலாக தூங்கிய மனைவி.. இப்ப என்னாச்சு தெரியுமா? | How Did Meerut Wife Get a Death Sentence After Leaving a Non-Venomous Snake on Husband’s Bed?

Next Post
கணவர் படுக்கையில் விஷமில்லா பாம்பை ஏவி.. அடுத்த ரூமில் கூலாக தூங்கிய மனைவி.. இப்ப என்னாச்சு தெரியுமா? | How Did Meerut Wife Get a Death Sentence After Leaving a Non-Venomous Snake on Husband’s Bed?

கணவர் படுக்கையில் விஷமில்லா பாம்பை ஏவி.. அடுத்த ரூமில் கூலாக தூங்கிய மனைவி.. இப்ப என்னாச்சு தெரியுமா? | How Did Meerut Wife Get a Death Sentence After Leaving a Non-Venomous Snake on Husband's Bed?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin