இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம் (Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
The post இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள் appeared first on Thinakaran.


