Last Updated:
இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது
இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் தான் அவரது திருமணம் ரத்தான நிலையில், அவர் பயிற்சி களத்துக்கு திரும்பி இருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா செயல்பட்டு வருகிறார்.
அணியின் அடுத்த கேப்டனாக இவர் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவரும் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். அவர்களது திருமணம் கடந்த மாதம் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் இந்த திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், மணமகன் முச்சல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நேற்று முன்தினம் தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக ஸ்மிருதி மந்தனா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில் இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது.
வரும் 21 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி தொடருக்காக ஸ்மிருதி மந்தனா தயாராகி வருகிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
December 08, 2025 10:20 PM IST


