லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இஸ்ரேலிய இராணுவம் தனது டெலிகிராம் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, இது குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தாக்குதல்
இந்த நிலையில், லெபனான் நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் (NNA), தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பல நகரங்களில் புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

Image Credit: Bloomberg News
கடந்த மாதம் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இன்று நடத்தப்பட்ட தாக்குதலே “மிகப்பெரிய தாக்குதல்” என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹிஸ்புல்லா தரப்பிலிருந்து இதற்குப் பதிலடி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேல் தனது எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

