இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து தட்டு மக்களையும் உள்ளடக்கியதாக இதுக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
அடித்தட்டு மக்களுக்கும், பேரிடர்களினால் நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்கும் உதவுவதோடு மட்டும் அல்லாமல்,அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்த முன்னெடுப்பு உதவுகிறது. CIMB வங்கி நிறுவனம், TNG Digital (TNGD)நிறுவனத்தோடு கைக்கோர்த்து மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தத் திட்டம், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக, இந்தத் திட்டம் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியிருப்பது மலேசியர்கள் மாந்தநேயத்தை பேணிக்காப்பது புலப்படுத்துகிறது.
கல்வி, பொருளாதார மேம்பாடு, இளைஞர்களுக்கான விளையாட்டுத்துறை என 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி விரிவடைந்துவருவது பெருமைக்குறியது என அமைச்சர் கூறினார். அதோடு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இது போன்ற திட்டங்கள் எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிட்ட வேண்டும்.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல்-இலக்கவியல் தொழில்நுட்பஉலகில் மலேசியர்களும் பங்குகொண்டு முன்னேற இலக்கவியல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது. ஆக மலேசியர்கள் இலக்கவியல் தொழிலநுட்ப அறிவை கொண்டிருத்தலின் அவசியத்தை அமைச்சர் கோபிந் சிங் வலியுறுத்தினார்.
இலக்கவியல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் திட்டங்களை இலக்கவியல் அமைச்சு செயல்படுத்திவருகிறது. இலக்கவியல் அமைச்சின் பல்வேறு முயற்சிகளில் (JelajahDigital Madani) எனப்படும் இலக்கவியல் தொடர் பயணம் மற்றும் மக்களுக்காக AI திறன்பயிற்சிகளும் திட்டங்களும் அடங்கும் என அமைச்சர் கூறினார்.
தனியார் துறை முயற்சிகள் இலக்கவியல் தொடர்பான அறிவை முழுமையாக பூர்த்தி செய்து, மேலும் துரிதப்படுத்துகிறது. ஆக தனியார் பெருநிறுவனங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதோடு, இலக்கவியல் தொழில்நுட்பத்தை அடித்தட்டு மக்களும் அறிந்து, தெளிந்து செயல்படுத்துவது மக்களை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்லும் என அமைச்சர் கூறினார்.
The post இலக்கவியல் தொழில்நுட்பம் அடிதட்டு மக்களிடம் சென்றடைய வேண்டும்: கோபிந்த் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.