
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் அணித்தலைவர் ரஜாட் பட்டிடார், குஜராத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இரண்டு அணிகளினதும் விபரம் பின்வருமாறு,
குஜராத்: 1. ஷுப்மன் கில் (அணித்தலைவர்), 2. சாய் சுதர்ஷன், 3. ஜொஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), 4. ஜேஸன் ஹோல்டர், 5. வொஷிங்டன் சுந்தர், 6. ராகுல் டெவாட்டியா, 7. ரஷீட் கான், 8. நிஷாந்த் சிந்து, 9. ககிஸோ றபாடா, 10. அர்ஷாட் கான், 11. மொஹமட் சிராஜ்.
மாற்றுவீரர் தெரிவுகள்: பிரசீத் கிருஷ்ணா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ரவட், குமார் குஷார்கா, சாய் கிஷோர்
பெங்களூரு: 1. விராட் கோலி, 2. தேவ்டுட் படிக்கல், 3. ரஜாட் பட்டிடார் (அணித்தலைவர்), 4. குருனால் பாண்டியா, 5. டிம் டேவிட், 6. ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் காப்பாளர்), 7. றொமாரியோ ஷெப்பர்ட், 8. புவ்னேஷ்வர் குமார், 9. ஜொஷ் ஹேசில்வூட், 10. ஜேக்கப் டஃபி, 11. ரஸிக் சலாம்.
மாற்றுவீரர் தெரிவுகள்: வெங்கடேஷ் ஐயர், கனிஷ் சோஹன், ஸ்வாப்னில் சிங், அபினந்தன் சிங், ஜோர்டான் கொக்ஸ்

