
இலங்கைக்கெதிரான மட்டுப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரை ஒத்தி வைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி நசீப் கான் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்ததுடன், இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் இத்தொடர் நடைபெறுமெனக் கூறியுள்ளார்.
விமானங்கள், ஏற்பாடுகள், பிராந்திய நிலைமைகளில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட கான், இலங்கையில் இப்போட்டிகளை நடத்தும் இரண்டாவது தெரிவு குறித்து ஆராய்ந்ததாகவும் ஆனால் அந்நேரம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு விமானங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
