தந்தையின் பெயரில் உள்ள பிற சொத்துக்களை உரிமை கோருதல்: சேமிப்பு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளைத் தவிர, இன்சூரன்ஸ், பரஸ்பர நிதிகள் அல்லது ஓய்வூதியக் கணக்குகள் போன்ற பிற முதலீடுகளையும் கவனியுங்கள். இதுபோன்ற ஏராளமான பணம் பல குடும்பங்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் செயல்முறை வேறாக இருந்தாலும், பொதுவான கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதாவது, சட்ட ஆவணங்களுடன் உங்கள் தந்தைக்கும், உங்களுக்குமான உறவை நிறுவுதல் மற்றும் அதை சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் சான்றுகள்.


