Last Updated:
கர்நாடகத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிஷ்டப்பா, குடும்பத்தினர் “தாபா” என்ற வார்த்தையைச் சொன்னதும் கண்விழித்ததால் பரபரப்பு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகத்தில் இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நபரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது, குடும்பத்தினர் “தாபா” என்ற வார்த்தையைச் சொன்னதும் கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகானின் பங்காபுராவைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி. 45 வயதான இவர் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிஷ்டப்பா, உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து உடலை குடும்பத்தினர் ஆம்புலன்சில் ஏற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது வாகனத்தில் சென்ற மனைவியும், மகன்களும், “அப்பா நீங்கள் விரும்பி சாப்பாடு சாப்பிடும் தாபா செல்கிறதே” என அழுதபடி கூறியுள்ளனர். இதைக் கேட்ட பிஷ்டப்பாவின் உடலில் அசைவு ஏற்பட்டு கண் விழித்துள்ளார்.
இதனால் ஏதும் புரியாமல் அவர்கள் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிஷ்டப்பா இறந்துவிட்டதாக நினைத்து அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்த நிலையில், அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து தங்கள் வாட்ஸ் ஆப் குரூப்களில் வைக்கப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மற்றும் அவர் இறப்பு குறித்து பகிர்ந்த மெசேஜ்களை டெலீட் செய்து வருகிறார்கள்.
மேலும் அவர் இறப்பு குறித்து ஒட்டிய போஸ்டர்களை உறவினர்கள் கிழித்து எரிந்தனர். இறந்ததாகக் கூறப்பட்ட ஒருவர், மீண்டும் கண்விழித்து எழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
February 14, 2025 12:28 PM IST